Home Featured கலையுலகம் ‘தில்லுக்கு துட்டு’ படத்தை முடித்த சந்தானம்!

‘தில்லுக்கு துட்டு’ படத்தை முடித்த சந்தானம்!

824
0
SHARE
Ad

Thillukku Thuttu ,சென்னை – நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இப்படம் வெற்றி பெறவே ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் நாயகனாக நடித்தார்.

இப்படமும் ரசிகர்களுடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படங்களை அடுத்து தற்போது ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்திலும், ‘சர்வர் சுந்தரம்’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் விறுவிறுப்பாக நடந்து வந்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் படப்பிடிப்பு இன்று முடிந்துள்ளது.

இதையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் ஈடுபட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். திகில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியிருக்கும் ‘தில்லுக்கு துட்டு’ படத்தை ராம்பாலா இயக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

சந்தானம், ஷனன்யா, சவுரப் சுக்லா, ஆனந்த்ராஜ், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.