Home Featured இந்தியா இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! டெல்லியில் பதட்டம்!

இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! டெல்லியில் பதட்டம்!

718
0
SHARE
Ad

புதுடெல்லி – இண்டிகோ விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இண்டிகோ விமானத்தின் அழைப்பு மையத்தை தொடர்பு கொண்ட ஒருவர், 11 இண்டிகோ விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

விமானங்களின் எண்கள் குறிப்பிடவில்லை என்றாலும், டெல்லியில் வந்து இறங்கும் அனைத்து இண்டிகோ விமானங்களும் சோதனையிடப்பட்டு வருகிறது. இதையடுத்து டெல்லி இந்திராகாந்தி அனைத்துலக விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானம் (6E853), தனியான ஒரு பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, உலக முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதேபோல் சென்னை விமான நிலையத்திற்கு பார்வையாளர்கள் நாளை வரை நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வந்த அழைப்பில் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து 5 விமானங்களில் கடுமையான சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஒரு விமானத்தை ஒரு மணி நேரம் சோதனையிட ரூ. 7 லட்சம் செலவு ஆகும். ஒரு விமானத்தை சோதனையிட குறைந்தது 5 மணி நேரம் ஆகும். இன்றைய நிலவரத்தின்படி இண்டிகோ நிறுவனத்திற்கு இந்த சோதனையால் ரூ. 2.5 கோடியில் இருந்து ரூ. 3 கோடி வரை செலவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.