Home Featured வணிகம் 1 ரிங்கிட் கொடுத்து மலிவு விலை வீடு முன்பதிவு – ராக்யாட் வங்கியின் புதிய அறிவிப்பு!

1 ரிங்கிட் கொடுத்து மலிவு விலை வீடு முன்பதிவு – ராக்யாட் வங்கியின் புதிய அறிவிப்பு!

517
0
SHARE
Ad

Bank Rakyatஜோகூர் பாரு – ஜோகூரில் முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் தங்கள் கனவு இல்லத்தை 1 ரிங்கிட் குடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தோடு வந்திருக்கிறது ராக்யாட் வங்கி (Bank Rakyat).

இந்த மலிவு விலை வீடுகளை முதல் முறை வாங்குபவர்களுக்காக சுல்தான் இப்ராகிம் அறக்கட்டளையுடன் இணைந்து இந்தத் திட்டத்தை ராக்யாட் வங்கி கொண்டுவந்துள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ முஸ்தபா அப்துல் ரசாக் அறிவித்துள்ளார்.

100,000 ரிங்கிட்டிற்குள் விலை கொண்ட இந்த மலிவு விலை வீடுகளை 1 ரிங்கிட் கொடுத்து முன்பதிவு செய்து கொள்வதோடு, தகுதி வாய்ந்தவர்களுக்கு முழு கடன் உதவியையும் அளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்காக 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இந்தத் திட்டம் விரைவில் மற்ற மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்றும் முஸ்தபா நேற்று பெர்சடா ஜோகூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

6,000 மலிவு விலை வீடுகள் கொண்ட இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் வங்கியின் பங்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ள முஸ்தபா, இந்தத் திட்டத்தை தனியார் கட்டுமான நிறுவனங்கள் அல்லது மாநிலத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தத் திட்டத்திற்காக வங்கி தரும் கடன் உதவியில் பல்வேறு நன்மை பயக்கும் உள்ளதாகவும் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்தத் திட்டத்தில் வீடு வாங்க தாங்கள் தகுதியானவர்களா என்பதை அறிய விரும்புபவர்கள் மாநில செயலாளர் அலுவலகத்திற்குச் சென்று அங்கு தங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டுமே தவிர வங்கியிடம் இல்லை என்றும் முஸ்தபா தகவல் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் சென்றடையும் வகையில் மாநில அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.