Home Featured நாடு எம்எச்370: மொசாம்பிக் பாகத்தின் வண்ணமும், தகடும் ஒத்துப் போகின்றது – லியாவ் தகவல்!

எம்எச்370: மொசாம்பிக் பாகத்தின் வண்ணமும், தகடும் ஒத்துப் போகின்றது – லியாவ் தகவல்!

1002
0
SHARE
Ad

Liow-Tiong-Laiகோலாலம்பூர் – மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாகங்களும் எம்எச்370 பாகங்கள் தான் என்பதை ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்திவிட்ட நிலையில், எதை வைத்து அவர்கள் இதை உறுதி செய்தார்கள் என்பதை மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் விளக்கமளித்துள்ளார்.

அந்தப் பாகங்களில் இருந்த வண்ணம் மற்றும் தகடு எம்எச்370 விமானத்தோடு ஒத்துப் போவதாக இன்று செய்தியாளர்களிடம் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

#TamilSchoolmychoice

இதனிடையே, தென்னாப்பிரிக்காவில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் எஞ்சின் பாகமும் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.