கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை மலேசியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் ஐஎஸ் தொடர்புடையவர்களைக் கண்டறிய புக்கிட் அமான் தீவிரவாத ஒழிப்பு சிறப்புப் பிரிவு (E8) நடத்திய அதிரடிச் சோதனையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் இருந்து ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.