உங்களது பயணங்களுக்கான முன்பதிவுகளை மிக எளிமையாக்கிவிட்டது கூகுள். எந்த நகரத்திலிருந்து எந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்று மட்டும் கூகுள் பிளைட்சில் குறிப்பிட்டால் போதும், அந்நகருக்குச் செல்லும் அத்தனை விமானச் சேவை நிறுவனங்களையும் அதன் விலையோடு உங்களுக்கு காட்டுகிறது கூகுள் பிளைட்ஸ்.
அண்மையில் தான் மலேசியாவிற்கு அறிமுகமாகியுள்ள இந்தச் சேவையில் விமானச் சேவைகளோடு, முக்கிய நகரங்கள், தங்கும்விடுதிகள் உள்ளிட்ட வசதிகளையும் அதன் விலையோடு ஒரே ‘கிளிக்’ கில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் புதிய சேவை பற்றி மேலும் விளக்கமளிப்பதை விட இதோ இந்த இணைப்பில் சென்று நீங்களே பயன்படுத்தி அதன் பயன்களை அறிந்து கொண்டு மகிழ்ச்சியடையலாம்.
https://www.google.com.my/flights/