Home Featured தமிழ் நாடு அதிமுக-வைத் தோற்கடிப்போம்; விஜயகாந்த் முதல்வராகப் பதவி ஏற்பார் – வைகோ நம்பிக்கை!

அதிமுக-வைத் தோற்கடிப்போம்; விஜயகாந்த் முதல்வராகப் பதவி ஏற்பார் – வைகோ நம்பிக்கை!

576
0
SHARE
Ad

vaikovijayakanth

சென்னை – வருகிற மே மாதம் விஜயகாந்த் தமிழக முதல்வராகப் பதவி ஏற்பார் என்று மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததைக் கண்டு இரண்டு எதிரிகளின் கூடாரங்களும் கதிகலங்கிப் போயிருப்பதாகக் கூறியுள்ள வைகோ, தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைப்போம் என்றும் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, சென்னை அண்ணா நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிப்பதே தங்கள் கூட்டணியின் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நல கூட்டணி – தே.மு.தி.க. கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிய கருத்து பற்றி வைகோவிடம் கேட்டபோது, பூஜ்யம் என்று கூறியவர்கள் விஜயகாந்த் அலுவலகத்தில் தவம் கிடந்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தங்கள் கூட்டணியில் சேரும்படி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசனுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.