Home Featured நாடு துங்கு ரசாலி நஜிப்புக்குஆதரவாக கையெழுத்திட்டார்!

துங்கு ரசாலி நஜிப்புக்குஆதரவாக கையெழுத்திட்டார்!

770
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் குவா மூசாங் (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா, நஜிப் தலைமைத்துவத்திற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளார்.

Tengku Razaleigh-signing-Kelantan declaration-Najibஅம்னோவின் தகவல் பிரிவுத் தலைவரும், மாரா நிறுவனத்தின் தலைவருமான டான்ஸ்ரீ அனுவார் மூசா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கிளந்தான் மாநிலத்தின் தேசிய முன்னணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேற்று கிளந்தான் பிரகடனம் என்ற ஆவணத்தின் வழி பிரதமர் நஜிப்புக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளனர். இந்தப் பிரகடனத்தில்தான் துங்கு ரசாலியும் கையெழுத்திட்டு நஜிப்புக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கிளந்தான் மாநிலத்தின்  கெத்தெரே நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான அனுவார் மூசா, துங்கு ரசாலியும் மற்ற கிளந்தான் மாநில தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் நஜிப்புடன் இணைந்து கிளந்தான் பிரகடனத்தில் கையெழுத்திடும் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிளந்தான் மாநில தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நஜிப் நடத்திய சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது என்றும் தெரிவித்த அனுவார் ஆனால் அந்த சந்திப்பு எங்கு நடைபெற்றது என்பது குறித்து தெரிவிக்கவில்லை.