Home Featured கலையுலகம் கார் விபத்தில் உயிர் தப்பிய ஆர்.ஜே.பாலாஜி!

கார் விபத்தில் உயிர் தப்பிய ஆர்.ஜே.பாலாஜி!

669
0
SHARE
Ad

rj. balajiசென்னை – நடிகர் ஆர்.ஜே பாலாஜி கார் விபத்தில் சிக்கியது கோலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிப்பது தவிர அவ்வப்போது மக்கள் மனதில் விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்களை விதைத்து வருபவர் பாலாஜி.

தேர்தலை மையமாக வைத்து சமீபத்தில் இவர் வெளியிட்ட காணொளி இணையத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக சென்னை மழை,வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது நடிகர் சித்தார்த்துடன் இணைந்து, ஆர்.ஜே பாலாஜி செய்த உதவிகளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது.

இந்நிலையில் திண்டிவனம் அருகே ஆர்.ஜே பாலாஜி விபத்தில் சிக்கிக்கொண்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது;

#TamilSchoolmychoice

“கடவுள் இருக்கான் குமாரு” படப்பிடிப்பு முடிந்து வரும்போது ஒரு பெரிய விபத்தில் சிக்கும்படி நேர்ந்தது.கடவுள் அருளால் சிறிய காயங்களுடன் தப்பி விட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார். இச்செய்தி திரையுலகினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.