Home கலை உலகம் ‘அஞ்சான்’ படத்தை கிண்டல் செய்த ஆர்.ஜே.பாலாஜி – சிம்பு ஆதரவு!

‘அஞ்சான்’ படத்தை கிண்டல் செய்த ஆர்.ஜே.பாலாஜி – சிம்பு ஆதரவு!

678
0
SHARE
Ad

rj balajiசென்னை, ஆகஸ்ட் 18 – ‘அஞ்சான்’ படத்தின் பெயரை குறிப்பிடாமல் அப்படத்தைப் பற்றி பிக் வாணொலி (எஃப்.எம்) வர்ணனையாளர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட டுவிட்டர் கருத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது.

தற்போது திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யு.டிவி நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் ‘அஞ்சான்’ படம் வெளியாகியுள்ளது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

குறிப்பாக, ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் கற்பனைச் சிறகை விரித்து, இப்படத்தை கிண்டல் செய்து வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

இத்தகைய விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில், “நல்ல விமர்சனங்களைக் கேட்டு வருகிறேன். என் வாயை அடைச்சுட்டேளே… ஊர் வாயை..?” என்று டுவீட் செய்தார்.

அந்த டுவீட்டை 600-க்கும் மேற்பட்டோர் ஆதரவளித்தனர். பாலாஜியின் கருத்துக்கு சிம்பு, தயாநிதி அழகிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

“உண்மையை இன்றைக்கு மறைக்கலாம்.. என்றைக்கும் மறைக்க முடியாது” என்று சிம்பு, பாலாஜி கூறிய கருத்திற்கு டுவிட்டரில் பதிலளித்தார்.

சிம்புவின் கருத்திற்கு பாலாஜி “உங்களிடம் இருந்து இந்த மாதிரியான கருத்து வருவது புதிதல்ல என்று கூறினார். உடனே சிம்பு, “நான் எப்போதும் உனக்காக இருப்பேன். யாருக்காகவும் உன்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டாம். நீ நீயாகவே இரு. கடவுளைத் தவிர மற்ற யாருக்கும் வளைந்து கொடுக்காதே” என்று அறிவுறுத்தினார்.

பாலாஜியின் சினிமா விமர்சனத்தால் கவர்ந்த ரசிகர்கள், இணையதளத்தில் ‘அஞ்சானுக்கு’ எதிராக ‘அர்ச்சனை’ செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.