Home Video ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ‘சிங்கப்பூர் சலூன்’

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ‘சிங்கப்பூர் சலூன்’

622
0
SHARE
Ad

சென்னை : வானொலி ஒலிபரப்பாளராகப் பணியாற்றி பிரபலமான ஆர்.ஜே.பாலாஜி சினிமாவில் சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களும் வெற்றியடைய, அவருக்கென எதிர்பார்ப்பும், ரசிகர் வட்டமும் உருவாகிவிட்டது.

பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் ‘சிங்கப்பூர் சலூன்’. சொந்தமாக சிகை திருத்தும் நிலையம் அமைக்க விரும்பும் கநாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அவருடன் சத்யராஜ் இணைந்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகவிருக்கும் சுவாரசியமான கதையம்சம் கொண்ட அந்தப் படத்தின் காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்.

#TamilSchoolmychoice