Home Featured நாடு நஜிப் வங்கிக் கணக்கில் வழக்கத்திற்கு மாறாகப் பணப்பரிமாற்றங்கள் – ஏபிசி ஆவணப்படம் தகவல்!

நஜிப் வங்கிக் கணக்கில் வழக்கத்திற்கு மாறாகப் பணப்பரிமாற்றங்கள் – ஏபிசி ஆவணப்படம் தகவல்!

596
0
SHARE
Ad

Australian-Broadcasting-Corporation-logoகோலாலம்பூர் – 2.6 பில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் ஆவணப்படம் ஒன்றை இன்று திங்கட்கிழமை வெளியிட்ட ஆஸ்திரேலியாவின் ஏபிசி (Australian Broadcasting Corporation) நிறுவனம், கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரையில் நஜிப்பின் வங்கிக் கணக்கில் வழக்கத்திற்கு மாறாகப் பெரிய அளவில் பணப்பறிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

மலேசிய வங்கியைச் சேர்ந்த ‘உயர் அதிகாரி’ ஒருவர் தங்களிடம் அந்த வங்கி ஆவணங்களைக் காட்டியதாகவும் ஏபிசி தெரிவித்துள்ளது.

சவுதி இளவரசரிடமிருந்து 75 மில்லியன் அமெரிக்க டாலரும் (இன்றைய நிலவரப்படி 301 மில்லியன் ரிங்கிட்), சவுதி அரேபியாவின் நிதியமைச்சில் இருந்து 80 மில்லியன் அமெரிக்க டாலரும் (இன்றைய நிலவரப்படி 321 மில்லியன் ரிங்கிட்) நஜிப்பின் வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளதாக ஏபிசி அந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளதாக மலெசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளின் ஷெல் நிறுவனத்தில் (British Virgin Islands shell company) இருந்து 120 மில்லியன் அமெரிக்க டாலரும் (இன்றைய நிலவரப்படி 482 மில்லியன் ரிங்கிட்) வந்துள்ளது.

இந்த மூன்று பணப்பரிமாற்றங்களும் கடந்த 2012-ம் ஆண்டு, ஜூன் 26-ம் தேதி நடைபெற்றுள்ளதாகவும் ஏபிசி குறிப்பிட்டுள்ளது.