அம்மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்திற்கு எதிராக இவர்கள் இருவரையும் சேர்த்து மொத்தம் 18 பேச்சாளர்கள் உரையாற்றினர்.
அம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அம்னோ உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்யக் கூட தயங்க மாட்டோம் என அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கடந்த சனிக்கிழமையே அறிவித்துவிட்ட நிலையில், மொகிதின் மற்றும் முக்ரிஸ் மீது அது போன்ற நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.