தற்போதைய நிலவரப்படி, விமானத்தில் 4 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பணியாளர்களைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, 5 பயணிகள் விமானத்தில் இருப்பதாக ‘ஏர்லைவ்’ உட்பட சில முன்னணி தகவல் தளங்கள் தெரிவித்தன.
இதனிடையே, கடத்தல்காரனின் பெயர் இப்ராகிம் சமாகா என்றும், அவன் தனக்கு அரசியல் தஞ்சம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சைப்ரசில் வாழும் பெண் ஒருவருக்கு அராப் மொழியில் எழுதப்பட்ட 4 பக்கக் கடிதங்களை கடத்தல்காரன் அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
Comments