Home Featured இந்தியா டி20 உலகக் கோப்பை அரைஇறுதி: இன்று நியூசிலாந்து-இங்கிலாந்து மோதுகிறது!

டி20 உலகக் கோப்பை அரைஇறுதி: இன்று நியூசிலாந்து-இங்கிலாந்து மோதுகிறது!

668
0
SHARE
Ad

new-zealandபுதுடெல்லி – 6-ஆவது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் குரூப் 1-இல் வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளி), இங்கிலாந்து (6 புள்ளி), குரூப் 2-இல் நியூசிலாந்து (8 புள்ளி), இந்தியா (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளன.

இன்று (புதன்கிழமை) டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இரவு அரங்கேறும் முதலாவது அரை இறுதியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி நியூசிலாந்து தான்.