Home Featured கலையுலகம் ‘நண்பா நீதான் எங்கள் விருது’ விக்ரமிற்கு ஆறுதல் கூறிய விவேக்!

‘நண்பா நீதான் எங்கள் விருது’ விக்ரமிற்கு ஆறுதல் கூறிய விவேக்!

932
0
SHARE
Ad

vivek-vikram342சென்னை – விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 2 வருடங்களுக்கு மேலாக விக்ரம் தன்னுடைய முழு உழைப்பையும் காட்டி ‘ஐ’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் விக்ரமின் பெயர் இடம்பெறவில்லை.

இது குறித்து கடந்த சில நாட்களாக நட்பு ஊடகங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் விவேக் கவிதை வடிவில் விக்ரமிற்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

விவேக் கூறியிருப்பதாவது:

#TamilSchoolmychoice

“நண்பா விக்ரம்,”ஐ” காக உடலை பெருக்கினாய்; பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்; உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது!. என்று கூறியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், விக்ரமிற்கு விருது கிடைக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு என்று நேற்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும் சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் விக்ரமிற்கு விருது கிடைக்காதது வருத்தமே, என்று கருத்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.