Home Featured கலையுலகம் தமன்னாவின் திரைப் பயணம் – ‘தோழா’ வரை! (படக் காட்சிகள்)

தமன்னாவின் திரைப் பயணம் – ‘தோழா’ வரை! (படக் காட்சிகள்)

1056
0
SHARE
Ad

கடந்த வாரம் தமிழிலும், தெலுங்கிலும் வெளியான ‘தோழா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் தமன்னா. தோழா படத்திற்கு பரவலாக வரவேற்பும், நல்ல விமர்சனங்களும் கிடைத்து வரும் வேளையில் வசூலிலும் வெற்றி பெற்றிருக்கின்றது.

அந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணத்தில் வந்த இன்னொரு உற்சாக செய்தி அகில இந்திய அளவில் பாகுபலி படத்திற்கு சிறந்த திரைப்படம் விருது என்ற அறிவிப்பு. காரணம் இந்தப் படத்தின் கதாநாயகியும் தமன்னாதான்!

தமன்னாவின் சில திரைப்படக் காட்சிகளையும் அவரது சில அசத்தல் படக் காட்சிகளையும் ஒரு வலம் வருவோமா?

#TamilSchoolmychoice

Tamanna-Karthi-Thozha“தோழா” படத்தில் கார்த்திக்குடன் இணையும் தமன்னா….

தோழா படத்தில் தமன்னா கார்த்திக்குடன் இரண்டாவது முறையாக இணைகின்றார்!

இன்று தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க முன்னணி முகம் தமன்னா!வட நாட்டுக்கே உரிய பாலும்-நெய்யும் கலந்த தேக நிறம். இன்றைய கதாநாயகர்களுக்கு ஏற்ற அளவான உயரம். கட்டான அளவெடுத்த உடலமைப்பு. எத்தகைய கவர்ச்சி காட்டவும் தயக்கம் காட்டுவதில்லை.

tamanna-1 இப்படியாக, இன்றைய கதாநாயகிக்குத் தேவையான அத்தனை அம்சங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ள காரணத்தால், குவிகின்றன வாய்ப்புகள்! சம்பளமும் கோடிகளை நெருங்குவதாக – அல்லது தாண்டி விட்டதாக கோலிவுட் வணிக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

அதே போன்று தான் இணையும் கதாநாயகர்களுடன் தமன்னா காட்டும் நெருக்கமும் அதனால் வெளியாகும் கிசுகிசுக்களுக்கும், வதந்திகளுக்கும் பஞ்சமில்லை.

Tamanna-Bahubali-1

Tamanna-Bahubali

பாகுபலியின் வெற்றிக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இரசிகர்கள் படத்தின் மற்ற அம்சங்களோடு தமன்னாவையும் சலிக்காமல் இரசித்தார்கள். நீல, வெண்மை நிறங்களில் அந்தக் கால இளவரசிகளுக்கேற்ற கச்சை கட்டிய ஆடையில் தமன்னா இரசிகர்களின் கண்களையும், உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.

Tamanna-paiya-movie-karthiஅண்மையில் வெளியான தோழாவுக்கு முன்பு தமன்னா கார்த்திக்குடன் இணைந்த படம் பையா. லிங்குசாமியின் இயக்கத்தில் வெற்றிக் கொடி நாட்டிய இந்தப் படத்தில் கார்த்திக்குடன் “அடடா மழைடா அடை மழைடா” என்ற பாடலுக்கு மழையில் நனைந்து கொண்டே பல வண்ண ஆடைகளில் – தமன்னா போட்ட ஜில்லான ஆட்டம் தமிழ் இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Tamanna-Bhatia-black-saree

பிரத்தியேக கவர்ச்சி ஆடைகள் மட்டும் என்றில்லாமல் கறுப்பு நிற சேலையிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதைக் காட்டி நிற்கும் தமன்னா!

tamanna-himmatwala-இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார் தமன்னா. அவர் முதலில் நடித்த படம் ஹிம்மத்வாலா. அந்தக் காலத்தில் நம்ம ஊர் ஸ்ரீதேவி இந்தியில் நடித்து சக்கைப் போடு போட்ட படம் ஹிம்மத்வாலா. அது மீண்டும் இந்தியில் எடுக்கப்பட்டபோது, அதன்வழி முதன் முதலாக இந்தியில் கால் பதித்தார் தமன்னா. ஆனால் படம் தோல்வி. இருப்பினும் அவரது அழகுக்கும் கவர்ச்சிக்கும் பட வாய்ப்புகள் தொடரவே செய்தன.

Tamanna-Humshakals-hindi

இந்தியில் தமன்னா நடித்த ஹம்ஷக்கால் படத்தில் தமன்னாவின் கடற்கரையோர நீச்சலுடைத் தோற்றங்கள் வட நாட்டு இரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தன.

tamanna-bhatia-photo-

விளையாட்டு வீராங்கனை தோற்றத்தில் கவர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கும் தமன்னா அடுத்து இணைவது விஜய் சேதுபதியுடன். விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் அவருக்கு ஜோடி தமன்னாதான்!

-செல்லியல் தொகுப்பு