Home Featured தொழில் நுட்பம் புதிய கூகுள் பைபர் போன் – தரை வழி தொலைபேசித் தொடர்புகள் மீண்டும் முக்கியத்துவம் பெறுமா?

புதிய கூகுள் பைபர் போன் – தரை வழி தொலைபேசித் தொடர்புகள் மீண்டும் முக்கியத்துவம் பெறுமா?

762
0
SHARE
Ad

சான் பிரான்சிஸ்கோ – செல்பேசிகளின் வரவால், தரைவழித் தொலைபேசிகள் முக்கியத்துவம் இழந்துவிட்டதோடு, இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் யாரும் தரைவழி தொலைபேசியை வைத்துக்கொள்வதும் இல்லை – பயன்படுத்துவதும் இல்லை!

Google fibre phone-இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் அந்த சேவையோடு சேர்த்து வழங்கும் தரை வழி தொலைபேசிகள்தான் நமது இல்லங்களை அலங்கரிக்கின்றனவே தவிர, யாரும் இப்போது தனியாக தரைவழி தொலைபேசி இணைப்புகளை விரும்புவதில்லை.

ஆனால் இந்நிலைமை இனி மாறக் கூடும்! கூகுள் மார்ச் 29ஆம் தேதி அறிமுகப்படுத்திய புதிய பைபர் போன் (Fiber Phone) எதிர்பார்த்தபடி மக்களை ஈர்த்தால்!

#TamilSchoolmychoice

இணையம் வழியான கிளவுட் (cloud) எனப்படும் தொழில்நுட்பம் மூலமாக இந்த பைபர் போன் இயங்கும். கூகுள் வழங்கும் அதிவிரைவு இணையத் தொடர்பு வசதிகளின் சந்தாதாரர்களுக்கும், அமெரிக்காவின் சில சந்தைகளுக்கும், முதலில் இந்த சேவை வழங்கப்படவிருக்கின்றது. பின்னர் மற்ற நாடுகளுக்கும் நகர்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.

வாய்மொழியாகத் தகவல்களைப் பதிவு செய்து பகிர்வது, தேவைப்பட்டால் அவற்றை எழுத்து பூர்வமாக மாற்றித் தருவது, வீட்டில் யாரும் இல்லாதபோது வரும் தொலைபேசி அழைப்புகளை சந்தாதாரர்களின் செல்பேசிகளுக்கு இணைப்பது போன்ற சில அதிநவீன தொழில் நுட்பங்களை இந்த பைபர் போன் கொண்டிருக்கும்.

தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு தரைவழித் தொலைபேசிகளின் தொழில்நுட்பங்கள் வளரவில்லைதான். ஆனால், இப்போது அதை சமன்படுத்தும் நோக்கில் கூகுள் புதிய பைபர் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வீட்டில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும், அந்த வீட்டுத் தொலைபேசியோடு தொடர்பில் இருக்கும்படியான தொழில் நுட்பத்தை உருவாக்கிச் செயல்படுத்துவதுதான் இந்த புதிய பைபர் தொலைபேசிகளின் நோக்கமாக இருக்கும்.