Home Featured உலகம் ஆங் சான் சூ கீ மியன்மார் நாட்டின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார்!

ஆங் சான் சூ கீ மியன்மார் நாட்டின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார்!

828
0
SHARE
Ad

யாங்கூன் – மியன்மார் நாட்டின் போராட்டவாதி ஆங் சான் சூ கீ நேற்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது நீண்ட நாளைய தோழர் ஹித்தின் கியாவ் மியன்மார் அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

Suu Kyi sworn in as Myanmar's foreign minister

மியன்மார் நாட்டின் அதிபர் ஹித்தின் கியாவ் – வெளியுறவு அமைச்சர் ஆங் சான் சூ கீ நேற்று அரசாங்கத் தலைநகர் நேப்பிடோவில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவிப் பிரமாணத்தின்போது …

#TamilSchoolmychoice

கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக பொதுமக்களின் ஜனநாயகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நேற்று மியன்மாரில் பதவியேற்றது.

வெளியுறவு அமைச்சுப் பொறுப்போடு, சூ கீ, கல்வி அமைச்சுக்கும், அதிபர் அலுவலகத்திற்கான அமைச்சுக்கும், மின்சார, சக்தி இலாகாக்களுக்கும் கூடுதல் பொறுப்பை வகிப்பார்.