Home Featured இந்தியா கிரிக்கெட் டி20 – இங்கிலாந்து நியூசிலாந்தை வென்று இறுதி ஆட்டத்தில் நுழைந்தது!

கிரிக்கெட் டி20 – இங்கிலாந்து நியூசிலாந்தை வென்று இறுதி ஆட்டத்தில் நுழைந்தது!

649
0
SHARE
Ad

Cricket - ICC-T20-World-Cup-2016புதுடில்லி – இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்றிரவு இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. முதலாவது அரை இறுதி ஆட்டமான இதில் இங்கிலாந்து அபாரமாக விளையாடி பலம் மிக்க நியூசிலாந்து குழுவை வெற்றி கொண்டது.

முதல் பாதி ஆட்டத்தில் நியூசிலாந்து 20 ஓவர்களை நிறைவு செய்தபோது, 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து 17.1 ஓவர்களிலேயே 159 ஓட்டங்களை எடுத்து, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து 7 விக்கெட்டுகளில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

நாளை நடைபெறும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் குழு இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதும்!