Home Featured நாடு நஜிப் வங்கிக் கணக்கிற்கு எந்த நிதியும் செல்லவில்லை – 1எம்டிபி மீண்டும் வலியுறுத்து!

நஜிப் வங்கிக் கணக்கிற்கு எந்த நிதியும் செல்லவில்லை – 1எம்டிபி மீண்டும் வலியுறுத்து!

724
0
SHARE
Ad

1mdb3கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் எந்த ஒரு பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என்பதை 1எம்டிபி (1Malaysia Development Bhd) இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.

“நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், அந்நிதி சவுதி அரேபியாவில் இருந்து தான் வந்துள்ளதை என்பதை விசாரணை அதிகாரிகள் பலர் உறுதிப்படுத்திவிட்டனர்.”

“இருந்தபோதிலும், எந்த ஒரு உறுதியான ஆதாரங்களும் இன்றி வால் ஸ்ட்ரீட் ஜார்னல் தொடர்ந்து அதே குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றது” என்று 1எம்டிபி இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னதாக, வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளியிட்ட செய்தியில், நஜிப்பிடமிருந்து கிட்டத்தட்ட 7 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதை சிஐஎம்பி தலைவர் நஜிர் துன் ரசாக் ஒப்புக் கொண்டதாகவும், நஜிப்பின் வங்கிக் கணக்கிற்கு வந்த பெரும்பான்மையான நிதி 1எம்டிபி-யில் இருந்து வந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.