கர்நாடகா – நேற்று வரலாற்று சிறப்பு மிக்க மனு ஒன்றை ரஜினிக்கு அனுப்பி, நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்ந்திருக்கிறது கர்நாடகா நீதிமன்றம். ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் அவருக்கு கட்அவுட்கள் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ரசிகர்களின் இந்தச் செயல்களால் பாதிக்கப்பட்ட மணிமாறன் என்ற நபர் பெங்களூரு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ரஜினிகாந்த் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதாகவும், அந்த பணத்தை ஏழைகளின் நலனுக்கு செலவிட உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதேபோன்று கமல்-விஜய்-அஜீத் இரசிகர்கள் கட்அவுட்கள் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது, ஒருவருக்கொருவர் சண்டையுடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், பலர் பாதிக்கப்படுவதால் ரஜினியைத் தொடர்ந்து, கமல்-விஜய்-அஜீத்திற்கு நோட்டீஸ் அனுப்ப பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இவர்களும் விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுள்ளார்கள்.