Home Featured கலையுலகம் கமலுக்கு பிரான்சில் ‘ஹென்றி லாங்லாய்ஸ்’ விருது வழங்கி கௌரவிப்பு!

கமலுக்கு பிரான்சில் ‘ஹென்றி லாங்லாய்ஸ்’ விருது வழங்கி கௌரவிப்பு!

820
0
SHARE
Ad

kamal-haasanபாரிஸ் – உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் திரையுலகின் உயரிய விருதான ஹென்றி லாங்லாய்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றி வரும் பங்களிப்பிற்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள கமல், “ஹென்றி லாங்லாய்ஸ் விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தருணத்தில் எனது ஆசான் அனந்து சார் உயிருடன் இருந்திருக்கலாம் என எண்ணுகிறேன். அவர் மூலமாகத் தான் ஹென்றி லாங்லாய்ஸ் விருது பற்றி அறிந்து கொண்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஹென்றி லாங்லாய்ஸ் பிரஞ்சு சினிமாவின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார். சினிமாவின் தீவிர ஆர்வலரான அவர் பிரஞ்சு சினிமாவின் அரிய பொக்கிஷங்களைப் பாதுகாத்துவந்துள்ளார்.

அவர் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.