விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது கூறியதாவது:- “தொழிலாளி தொடர்பாக ஒருவர் எழுதிய கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு தொழிற்சாலையில் போனஸ் வழங்குவது தொடர்பாக போராட்டம் நடைபெறுகிறது. இறுதியில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது”.
“அப்போது ஒரு தொழிலாளி மட்டும் போனஸ் வாங்க மறுக்கிறார். ‘நீங்கள் போடும் சில எலும்பு துண்டுகள்தான் இது. அதுவும் எங்கள் உடம்பில் இருந்து எடுக்கப்பட்டதுதானே?’ என்று அந்த தொழிலாளி கேட்கிறார்”.
“இதுபோல்தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்துக்கு தீமையை விளைவிக்கும். ஜனநாயகம் தான் மற்ற ஆட்சிகளை விட குறைந்த தீமையை கொண்டது என்பார்கள். ஆனால் பெரிய தீமைக்கு அது வழிவகுத்து விடக்கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அறம் சார்ந்தவர்களும், அறிவு ஜீவிகளும் விரும்புவதில்லை” என கவிஞர் வைரமுத்து பேசினார்.