Home Featured இந்தியா கொல்கத்தா மேம்பால விபத்து: பலி எண்ணிக்கை 24! 78 பேர் படுகாயம்!

கொல்கத்தா மேம்பால விபத்து: பலி எண்ணிக்கை 24! 78 பேர் படுகாயம்!

566
0
SHARE
Ad

bridgecollapseகொல்கத்தா – கொல்கத்தாவில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்து 24 பேர் உயிரிழந்தனர். 78 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

நேற்று மதியம் 12.30 மணியளவில் புரா பஜார் பகுதியில் சுமார் 250 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பாலத்தின் கீழே கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. மக்கள் நடந்து சென்றனர். அவர்கள் அனைவரும் மேம்பால இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

பாலத்தின் கீழே ஏராளமான கடைகள் இருந்தன. அந்த கடைகளும் நொறுங்கின. பாலம் இடிந்து விழுந்த தகவல் அறிந்தவுடன், தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

kolkata bridge collapse(cc)ஆனால் பல டன் எடையுள்ள இரும்பு தூண்கள் சரிந்து விழுந்திருப்பதால் அவற்றை தீயணைப்பு படையினரால் அகற்ற முடியவில்லை. உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. அதன்படி ராணுவ வீரர்கள் ராட்சத கிரேன் மற்றும் அதிநவீன கருவிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை, 24 பேரின் சடலங்களும், 78 பேரை படுகாயங்களுடன் மீட்டுள்ளனர். இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

kolkata bridge collapseபிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கொல்கத்தா மேம்பால விபத்து அதிர்ச்சி அளிக்கிறது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.