Home இந்தியா பானி புயல் மேற்கு வங்காளத்தை அடைந்தது, கடும் மழையால் மக்கள் அவதி!

பானி புயல் மேற்கு வங்காளத்தை அடைந்தது, கடும் மழையால் மக்கள் அவதி!

885
0
SHARE
Ad

கொல்கத்தாஒடிசாவில்  நேற்று வெள்ளிக்கிழமை கரையை கடந்து பொருள் மற்றும் உயிர் சேதங்களை ஏற்படுத்திய பானி புயல் (Cyclone Fani), இன்று சனிக்கிழமை அதிகாலை (இந்திய நேரம்) மேற்கு வங்காளத்தை அடைந்தது.

ஒடிசாவில் இப்புயல் தாக்கத்தால், 12 பேர் இதுவரையிலும் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த புயலானது, மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் சுமார் 90 கிமீ வேகத்தில் காற்று வீசுவதாகவும் கூறப்படுகிறது.

கடலோர மாவட்டமான மிட்னாபூரை சேர்ந்த 15,000-க்கும் அதிகமான மக்கள் நேற்று இரவு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போல், மேற்கு மிட்னாபூரை சேர்ந்த 20,000-க்கும் அதிகமான மக்களும் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேற்கு வங்காளத்தில் பானி புயல் காரணமாக கனமழை பெய்து வருவதாகவும், பல மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.