Home Featured கலையுலகம் ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கியது!

‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கியது!

809
0
SHARE
Ad

chennai28- 2சென்னை – வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சென்னை 600028’ இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த ‘சென்னை 600028’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் புதுமுகமாக அறிமுகமானாலும், இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவரவர்களுக்கென்று தனி இடத்தை பிடித்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வெங்கட்பிரபு முடிவு செய்து, அதற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கினார்.

venkat prabhuசமீபத்தில் இரண்டாம் பாகத்திற்கான போஸ்டர்கள் எல்லாம் வெளியிட்டு படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர். இந்நிலையில், இன்று இப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

விரைவில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். முந்தைய பாகத்தில் நடித்த எல்லா நடிகர்களும் இந்த பாகத்திலும் நடிக்கவிருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்குவதோடு இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இந்த வருடத்தில் படம் வெளியாகும் என தெரிகிறது.