Home Featured இந்தியா சவுதியில் இந்திய பணியாட்களுடன் சாப்பிட்ட மோடி!

சவுதியில் இந்திய பணியாட்களுடன் சாப்பிட்ட மோடி!

701
0
SHARE
Ad

Modivc1சவுதி – பிரதமர் மோடி, ரியாதில் உள்ள இந்தியப் பணியாட்களுடன் ஒன்றாக உட்கார்ந்து உணவுகள் சாப்பிட்டுள்ளார். தன்னுடைய இரண்டு நாள் சுற்றுப் பயணத்தின் முதல் நாளான நேற்று சவுதி அரேபியாவில் உள்ள ரியாதில் இந்தியப் பணியாட்களைச் சந்தித்து “உங்களுடைய வியர்வையும் உழைப்பும் தான் என்னை இங்குக் கூட்டி வந்திருக்கின்றது”.

“உங்களுடைய சந்தோஷமே என்னுடைய சந்தோஷமும். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் நானும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது” என்று அங்கிருந்த 300 க்கும் மேற்பட்ட “எல் அண்ட் டி” நிறுவன ஊழியர்களிடம் அவர்களது குடியிருப்பிற்கே சென்று பேசியுள்ளார் மோடி.

அவர்கள் அனைவரையும் “நரேந்திர மோடி” செயலியை பதிவிறக்கம் செய்யக் கூறி, “எனக்கு எந்த வேலையும் கிடையாது. வேலையெல்லாம் அந்த 125 கோடி மக்கள் செய்வது. இந்த செயலியை தங்கள் செல்-ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால், நான் உங்கள் சட்டைப் பய்யிலேயே இருப்பேன். இதை விட வேறு என்ன வேண்டும்?” என்று பேசியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

17 நிமிடங்கள் நடந்த இந்த உரையாடலில் “உங்களுடைய வியர்வைத் துளிகள் தான் இந்தியாவின் மதிப்பு. வருங்காலத்தில், இந்தியாவில் இருந்த இளைஞர்கள் தான், இந்த மெட்ரோவைக் கட்டி முடித்தார்கள் என்று மக்கள் சொல்வார்கள். உங்கள் குடும்பங்கள் அனுப்பும் கடிதங்களை நான் படிப்பேன். அதில் நல்ல செய்தி இருந்தால் என் மனம் குளிரும். கேட்ட செய்தியாக இருந்தால் வாடி விடும்.

Modivc2இந்நேரத்தில் சவுதியின் அரசரான சல்மான், ஒவ்வொரு முறை இந்தியாவைப் புகழ்ந்து பேசும் போதும் நான் பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி நடப்பேன். உங்களால் இந்தியாவிற்கு பெருமை சேர்ந்ததோடு, இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இதை தன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஏற்றவும் அவர் மறக்கவில்லை. “ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு, எல் அண்ட் டி குடியிருப்பு, சவுதி அரேபியாவில்” என டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார் மோடி.