Home Featured உலகம் பிரபாகரனின் உடல் எரிக்கவில்லை புதைக்கப்பட்டது – சரத் பொன்சேகா பரபரப்பு!

பிரபாகரனின் உடல் எரிக்கவில்லை புதைக்கப்பட்டது – சரத் பொன்சேகா பரபரப்பு!

1237
0
SHARE
Ad

prabakaranகொழும்பு – விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை, புதைக்கப்பட்டது என்று இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும், மைத்திரிபால அரசின் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொழும்பில் சரத் பொன்சேகா கூறும்போது, ”இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்திற்கு பிறகு, பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டு எரிக்கப்பட்டு அஸ்தி கடலில் வீசப்பட்டதாக முன்னாள் ராணுவத் தளபதி தயா ரட்நாயக்க கூறியதில் உண்மை இல்லை.

பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை, புதைக்கப்பட்டது. அதேபோல, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் உடல் எரிக்கப்பட்டு அஸ்தி கடலில் வீசப்பட்டதாக தயா ரட்நாயக்கவின் கூறிய தகவல்களும் தவறானது.

#TamilSchoolmychoice

தயா ரத்னாயக்கா, இறுதி யுத்தம் நடைபெற்றபோது யுத்தக் களத்தில் இருக்கவில்லை. அதனால் அங்கு என்ன நடந்தது என்று அவருக்கு தெரியாது” என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.