Home Featured கலையுலகம் கனவுப் படம் “குற்றப் பரம்பரை” – பாரதிராஜா தொடக்கினார்! (படக் காட்சிகள்)

கனவுப் படம் “குற்றப் பரம்பரை” – பாரதிராஜா தொடக்கினார்! (படக் காட்சிகள்)

795
0
SHARE
Ad

மதுரை: எப்போது எங்கே பேட்டி கொடுத்தாலும், “என் வாழ்நாளுக்குள் எனது கனவுப் படமான குற்றப் பரம்பரை படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது இலட்சியம்” என்று கூறுவார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

இடையில், ஒரு நாவலின் அடிப்படையில் அந்தப் படத்தை உருவாக்கவிருப்பதாக, ‘தாரை தப்பட்டை’ படத்தை அண்மையில் எடுத்திருந்த இயக்குநர் பாலா அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையில் வாக்குவாத மோதல்கள் நிகழ்ந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று மதுரை உசிலம்பட்டியில் தனது கனவுப் படமான குற்றப் பரம்பரை படத் தொடக்க விழாவை பாரதிராஜா நடத்தியுள்ளார். அந்த படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice

Kutraparambarai (42)

படத் தயாரிப்பாளரும், திரைப்பட ஆய்வாளருமான தனஞ்செயனுக்கு பொன்னாடை அணிவிக்கும் பாரதிராஜா

Kutraparambarai (42).jpg,

இயக்குநர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், ஆகியோருக்கு மரியாதை செய்யும் பாரதிராஜா…Kutraparambarai (42).jpg;

பாரதிராஜாவே குத்து விளக்கேற்றி படத்தை தொடக்கி வைக்கின்றார்…Kutraparambarai,,,,

ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் (சிவப்பு சட்டையுடன் இருப்பவர்) படத் தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்களுடன் பாரதிராஜா…Kutraparambarai,,,,.jpg.,.

படத்தின் முதல் காட்சிக்கு கிளாப் அடிக்கப்படுகின்றது….Kutraparambarai,.

கனவுப் படம் – இலட்சியக் காவியம் உருவாகப் போகும் மகிழ்ச்சியில் பாரதிராஜா. இந்தப் படத்தை இலக்கியக் காவியமாக எடுக்கப்போகிறேன் என்றும் பணத்துக்காக இந்தப் படத்தை எடுக்கவில்லை என்றும் பாரதிராஜா கூறியிருக்கின்றார்….Kutraparambarai,

படத் தொடக்க விழாவில் உரையாற்றும் நடிகர் ராஜேஷ்…
Kutraparambarai.;;

தனது தாயாருடன் தான் இருக்கும் ஓவியத்துடன் உரையாற்றும் பாரதிராஜா….Kutraparambarai

பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு மரியாதை செய்யும் பாரதிராஜா. இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இளையராஜாவுடன் பாரதிராஜா இணையப் போகின்றார்கள் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இருவரும் இணைந்த கடைசிப் படம் – ‘நாடோடித் தென்றல்’. அதன் பின்னர் இருவரும் இணைந்து எந்தப் படத்திலும் பணியாற்றவில்லை….Kutraparambarai.jpg,

தனக்குக் கட்டப்பட்ட பரிவட்டத்துடன் பாரதிராஜா….Kutraparambarai.jpg,.jpg,,...jpg.,

கவிப்பேரரசு வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவுக்கு மரியாதை செய்யும் பாரதிராஜா…Kutraparambarai.jpg,.jpg,,

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வாழ்த்துரை வழங்குகின்றார்….