Home Featured இந்தியா பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள்: அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட 500 இந்தியர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள்: அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட 500 இந்தியர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.

1438
0
SHARE
Ad

Carol Premiere - 68th Cannes Film Festivalபுதுடில்லி – நேற்று வெளியிடப்பட்ட பனாமா பேப்பர்ஸ் இரகசிய ஆவணங்களின் வாயிலாக, இந்தியாவின் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மாமனார் அமிதாப் பச்சான் ஆகியோர் வெளிநாட்டு வங்கிக் கணக்குப் பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டனர் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

இதனைத்த தொடர்ந்து இவர்களைத் தவிர மேலும் 500க்கும் மேற்பட்ட இந்திய வணிகர்கள், பிரபலங்கள் இத்தகைய பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சட்டத்துக்குப் புறம்பாக, உரிய அரசாங்க அனுமதிகள் பெறாமல் யாராவது வெளிநாட்டுக் கணக்குகள் வைத்திருந்தாலோ, பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருந்தாலோ, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளார்.

#TamilSchoolmychoice

amithabachanஉலகின் பல தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் ஆகியோரின் பணப் பரிமாற்றங்கள் பனாமா பேப்பர்ஸ் வாயிலாக கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த ஆவணங்களில் பிரதமர் நஜிப்பின் இரண்டாவது மகன் முகமட் நசிபுடின் தொடர்பான பணப் பரிமாற்றங்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.