Home Featured உலகம் பனாமா பேப்பர்ஸ் : தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியத் தகவல்கள்!

பனாமா பேப்பர்ஸ் : தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியத் தகவல்கள்!

1010
0
SHARE
Ad
  • பெயர் குறிப்பிட விரும்பாத அமைப்பு ஒன்று பனாமா நாட்டின் வழக்கறிஞர் நிறுவனமான மொசாக் ஃபொன்செகா என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆவணத் தரவுகளை பத்திரிக்கையாளர்களிடம் கசிய விட்டிருக்கின்றது. இதற்காக அந்த இரகசிய அமைப்பு பணம் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. இலவசமாகவே வெளியிட்டிருக்கின்றது.Mossack Fonseca website
  • மொசாக் ஃபொன்செகா என்ற இந்த வழக்கறிஞர் நிறுவனம் அனாமதேய நிறுவனங்களை அதாவது பெயரளவில் மட்டுமே செயல்படும் நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிக்கின்றது. இதன் மூலம் தனிநபர்களும், நிறுவனங்களும் தங்களுக்குரிய பணத்தை இந்த நிறுவனங்களில் பதுக்கி வைக்கவும், பரிமாற்றங்கள் செய்யவும் ஏதுவாகின்றது. இத்தகைய பெயரளவு நிறுவனங்களை ஆங்கிலத்தில் லெட்டர் போக்ஸ் நிறுவனங்கள் – தபால் பெட்டி நிறுவனங்கள்- என்று கூறுவார்கள்
  • இதுபோன்ற 215 பெயரளவு – தபால் பெட்டி நிறுவனங்களின் – ஆவணங்கள்தான் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. 1970 முதல் 2016 ஆரம்பம் வரையிலான இந்த நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகளை இந்த ஆவணங்கள் விவரிக்கின்றன.
  • 5 மில்லியன் ஆவணங்கள் இதுபோன்று கசிய விடப்பட்டுள்ளன. தகவல் ஊடக வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய ஆவண வெளியீடு எனக் கருதப்படுகின்றது.
  • இவற்றில் 4.8 மில்லியன் ஆவணங்கள் இணைய அஞ்சல் கடிதங்களாகும்.
  • 3 இலட்சம் ஆவணங்கள், பத்திரங்கள் போன்ற ஆவணங்களாகும்
  • 11 இலட்சம் ஆவணங்கள் புகைப்படங்கள், வரைபடங்கள் வடிவிலானவையாகும்.
  • 22 இலட்சம் ஆவணங்கள் பிடிஎஃப் (PDF) எனப்படும் கணினி வழி நிரந்தர வடிவிலான ஆவணங்களாகும்.
  • 3 மில்லியன் ஆவணங்கள் கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தரவுகளாகும் (Database entries)
  • உலகம் எங்கும் உள்ள 78 நாடுகளிலிருந்து சுமார் 100 பத்திரிக்கைகளைச் சேர்ந்த சுமார் 400 பத்திரிக்கையாளர்கள் இந்த ஆவணங்களைப் பரிசீலித்து வருகின்றனர்.

-செல்லியல் தொகுப்பு

 

 

#TamilSchoolmychoice