Home Featured நாடு கெவின் மொராயிஸ் கொலை வழக்கு விசாரணை நாளை தொடங்குகிறது!

கெவின் மொராயிஸ் கொலை வழக்கு விசாரணை நாளை தொடங்குகிறது!

857
0
SHARE
Ad

kevin morais0022கோலாலம்பூர் – அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் கொலையில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மருத்துவர் உட்பட 7 பேர் மீதான வழக்கு நாளை முதல் துவங்குகிறது. 

நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா முன்னிலையில், 16 நாட்கள் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நடப்பு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞரான டத்தோ அப்துல் ரசாக் மூசா தெரிவித்துள்ளார்.

நாளை ஏப்ரல் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும், மே 3-6, ஜூன் 6-8 மற்றும் ஜூன் 27-28-ம் தேதி வரையிலும் மொத்தம் 16 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விசாரணைகளில் 60 சாட்சிகள் விசாரிக்கப்படவுள்ளனர்.