Home Featured தமிழ் நாடு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘கள்’ தேசிய மதுபானமாகும் – சீமான் பேச்சு!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘கள்’ தேசிய மதுபானமாகும் – சீமான் பேச்சு!

782
0
SHARE
Ad

seemanராமேஸ்வரம் – ராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் சிவக்குமாரை அறிமுகபடுத்தி உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பனம்பாலை (கள்) தேசிய மதுபானமாக அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “சிங்களர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, எங்கள் ஆட்சியில் 50 ஆயிரம் பேரை கொண்ட சிறப்பு காவல் படை அமைப்போம். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து ஒவ்வொரு படகிலும் 5 பேரை பாதுகாப்புக்காக அனுப்புவோம். மீனவர்கள், பெண்களுக்கு என தனி தொகுதிகள் ஏற்படுத்துவோம். தமிழ் தேசிய வைப்பகம் (வங்கி) துவக்குவோம். அதன் மூலம் அனைவருக்கும் வட்டி இல்லா கடன் கொடுப்போம். பனம்பால், தென்னம்பால் ஆகியவற்றை தேசிய மது பானமாக (மூலிகை சாறு) அறிவிப்போம். இவற்றையெல்லாம் நிறைவேற்ற எங்களை தேர்ந்தெடுங்கள்” என்று சீமான் கூறியுள்ளதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice