கோலாலம்பூர் – நேற்று மாலை 5.30 மணியளவில் நாடாளுமன்ற அவை நடந்து கொண்டிருக்கும்போது, தனது நாற்காலியில் மயக்க நிலையில் காணப்பட்ட சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹானிபா மைடின் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமையை முதலில் கண்டுபிடித்தவர் அவருக்கு அடுத்து இரண்டு நாற்காலிகள் தள்ளி நாடாளுமன்ற அவையில் அமர்ந்திருக்கும் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆவார்.
தற்போது ஹனிபா, மருத்துவமனையில் தீவிர கவனிப்பு சிகிச்சைப் பிரிவில் உடல்நலம் தேறி வருவதாகவும், அவர் சீக்கிரமே உடல் நலம் தேறிவர பிரார்த்திப்பதாகவும் சாலாஹூடின் கூறியுள்ளார்.
பாஸ் கட்சியின் சார்பாக 2013இல் சிப்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹனிபா மைடின், கடந்த ஆண்டு அந்தக் கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து புதிதாக உருவாகிய அமானா கட்சியில் இணைந்தார்.