Home Featured உலகம் ஜகார்த்தாவில் விமானங்கள் மோதல்: உயிர் பயத்தில் அலறிய பயணிகள்!

ஜகார்த்தாவில் விமானங்கள் மோதல்: உயிர் பயத்தில் அலறிய பயணிகள்!

744
0
SHARE
Ad

Batik-HLPஜகார்த்தா – கடந்த திங்கட்கிழமை ஜகார்த்தாவில் ஓடுதளத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதால், ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் உயிர் பயத்தில் அலறியுள்ளனர்.

ஜகார்த்தா விமான நிலையத்தில் நேற்று 49 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் புறப்படுவதற்குத் தயாரான பாத்திக் ஏர் (Batik Air Boeing 737-800) விமானத்தின் இறக்கை, ஓடுபாதையில் இழுத்து வரப்பட்டுக் கொண்டிருந்த டிரான்ஸ்நூசா விமானத்தின் வால்பகுதியில் மோதியது.

இதனால் பாத்திக் ஏர் விமானத்தின் இறக்கை சேதமடைந்து தீப்பற்றிக் கொண்டது. விமானத்தின் உள்பகுதியில் கடும் புகையுடன் பெட்ரோல் நாற்றமும் பரவ பயணிகள் உயிர் பயத்தில் அலறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், உடனடியாக விமானத்தின் அவசரக்கதவுகள் திறக்கப்பட்டு பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்றாலும், விபத்து குறித்து விசாரணை நடத்த இந்தோனிசிய அரசு விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.