Home Featured உலகம் பனாமா பேப்பர்ஸ் : முதல் பலியாக ஐஸ்லாந்து பிரதமர் இராஜினாமா!

பனாமா பேப்பர்ஸ் : முதல் பலியாக ஐஸ்லாந்து பிரதமர் இராஜினாமா!

935
0
SHARE
Ad

Gunnlaugsson reuters 050416ரெய்ஜாவிக் – பனாமா பேப்பர்ஸ் விவகாரம் உலகம் முழுவதும் அரசியல் ரீதியாக பல்வேறு பூகம்பங்களை ஏற்படுத்தப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில், அதன் முதல் பலியாக ஐஸ்லாந்து பிரதமர் திகழ்கின்றார்.

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் தனது பெயரும் இடம்பெற்றிருந்ததையடுத்து, ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டுர் டேவிட் குனாலுக்சன் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

41 வயதான சிக்முண்டூரும், அவரது மனைவியும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் பெரும் முதலீகளைச் செய்துள்ளதாக ஆதாரங்களுடன் பனாமா பேப்பர்ஸ் வெளியிட்டது.

#TamilSchoolmychoice

அதனையடுத்து, அந்நாட்டில் சிக்முண்டூருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

இதனால், சிக்முண்டூர் டேவிட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அனைத்துலக புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர்.

இந்த தகவல்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்றுபனாமா ஆவணங்கள் என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டு, வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.