Home உலகம் உலகக் கிண்ணம்: ஐஸ்லாந்திடம் சமநிலை கண்ட அர்ஜெண்டினா

உலகக் கிண்ணம்: ஐஸ்லாந்திடம் சமநிலை கண்ட அர்ஜெண்டினா

952
0
SHARE
Ad
பினால்டி கோலைத் தவறவிட்ட அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி

மாஸ்கோ – நேற்று சனிக்கிழமை (ஜூன் 16) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன.

முதலாவதாக நடைபெற்ற ‘சி’ (C) பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 கோல் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது.

இரண்டாவது ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா 1-1 கோல் எண்ணிக்கையில் ஐஸ்லாந்திடம் சமநிலை மட்டுமே காண முடிந்தது.

#TamilSchoolmychoice

தனக்குக் கிடைத்த பினால்டி வாய்ப்பை அர்ஜெண்டினா விளையாட்டாளர் மெஸ்ஸி தவற விட்டதைத் தொடர்ந்து அர்ஜெண்டினாவுக்கு கிடைத்த அற்புத வாய்ப்பு பறிபோனது.

ஐஸ்லாந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பது இதுதான் முதல் தடவையாகும்.