Home Featured தமிழ் நாடு பல்லாவரம் அதிமுக வேட்பாளராக சி.ஆர். சரஸ்வதி அறிவிப்பு!

பல்லாவரம் அதிமுக வேட்பாளராக சி.ஆர். சரஸ்வதி அறிவிப்பு!

480
0
SHARE
Ad

201604061658164721_Pallavaram-constituency-candidate-changed-CR-Sarawati_SECVPFசென்னை – சில மாதங்களுக்கு ஒருமுறை கிரகங்கள் இடம் மாறும் – அதனால், பலன்களும் மாறும் என்பது ஜாதக விதி. ஆனால், அதிமுகவிலோ ஒரே நாளில் ஒரு சிலரின் கிரகபலன்கள் மாறும் என்பது தமிழக அரசியலின் விதி!

நேற்று முன்தினம்தான் அதிமுக போட்டியிடவிருக்கும் 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஆனால் அப்பட்டியல் இன்று மட்டும் நான்கு முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று வரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் சுமார் 10 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன என்ற நிலையில் மேலும் மாற்றங்கள் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

தற்போது மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக ராஜன் செல்லப்பா அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அறிவிக்கப்பட்ட மாற்றங்களின் படி, வேதாரண்யத்தில் ஓ.எஸ். மணியன்; மன்னார்குடியில் காமராஜ் உள்ளிட்டோரும், பல்லாவரம் தொகுதியில் நடிகையும் பேச்சாளருமான சி.ஆர். சரஸ்வதி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில், செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அதிமுக சார்பாக விவாதங்களில் பங்குபெற்று ஆணித் தரமாகவும், துணிச்சலோடும் விவாதங்களில் ஈடுபடுபவர் சி.ஆர்.சரஸ்வதி. இருப்பினும் முதலில் வெளியிடப்பட்ட பட்டியலில் சரஸ்வதி இடம் பெறவில்லை என்ற செய்தி அதிமுக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் ஒரே நாளில், மனம் மாறிய ஜெயலலிதா, சரஸ்வதிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றார். பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் சரஸ்வதி தனது நாவன்மையாலும், விவாதிக்கும் திறனாலும் வெல்லக் கூடிய வாய்ப்புள்ள வேட்பாளராகக் கருதப்படுகின்றார்.