Home Featured நாடு 1எம்டிபி அறிக்கை மேல்பூச்சு பூசி மறைக்கும் முயற்சி – அம்பிகா – மரியா சின் சாடல்!

1எம்டிபி அறிக்கை மேல்பூச்சு பூசி மறைக்கும் முயற்சி – அம்பிகா – மரியா சின் சாடல்!

584
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்காய்வுக் குழு 1எம்டிபி விவகாரம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கை, மேல்பூச்சு போல பூசி மறைப்பதைப் போன்றது என வழக்கறிஞரும் சமூகப் போராட்டவாதியுமான அம்பிகா சீனிவாசன் சாடியுள்ளார்.

Ambiga-Featureஅந்த அறிக்கையில் விவகாரத்தின் முழு விவரங்களை தெரிவிக்காததுடன், எந்த ஒரு தரப்பையும் செய்த தவறுக்காக நேரடியாக பெயர் குறிப்பிடவில்லை என்றும், மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான அம்பிகா கூறினார்.

1எம்டிபி குறித்த அரசாங்கத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையை (Auditor-General’s report)  பகிரங்கமாக்கி, நாடாளுமன்ற அறிக்கையோடு இணைக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

மக்கள் மத்தியில் இத்தனை தகவல்கள் பகிரங்கமாக இருக்கும் பட்சத்தில் இதுவரையில் யார் மீதும் தவறு இழைத்ததாக சுட்டிக் காட்டப்படாதது ஏன் என்றும் அம்பிகா சாடியுள்ளார்.

நாட்டின் முறைகேடான சட்ட அமைப்பின் மற்றொரு அங்கமாகப் பார்க்கப்படும் நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வு குழு 1எம்டிபி அறிக்கையின் மூலம் அதன் மீது மக்கள் வைத்திருந்த நம்பகத்தன்மையை சிதைத்துவிட்டது என்றும் கூறினார்.

மரியா சின்

maria chin abdullahபெர்சே 2.0 அமைப்பின் தலைவரான மரியா சின் அப்துல்லா சுட்டிக் காட்டப்பட வேண்டிய முக்கிய அம்சங்களை நாடாளுமன்றக் கணக்காய்வுக் குழு தவிர்த்துவிட்டது எனச் சாடியுள்ளார்.

“இது அனுதாபத்துக்குரிய ஓர் அறிக்கை. பதில் சொல்ல வேண்டிய முக்கிய கேள்விகளை இந்த அறிக்கை தவிர்த்து விட்டது. பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது?  1எம்டிபி நிறுவனம் முதலீட்டிலும், கடன்களைப் பெறுவதிலும் தவறுகள் செய்திருக்கின்றார்கள் என அவர்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளார்கள். அந்நிறுவனம் 50 பில்லியன் ரிங்கிட் கடன் வைத்திருக்கின்றது என்பது நமது மூளையையே கலங்க வைக்கின்றது” என்று மரியா சின் கூறியுள்ளார்.

முறையான, சுதந்திரமான விசாரணை ஒன்று நடைபெறுவதுதான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையக் கூடிய ஒரே வழி என்றும் மரியா சின் வலியுறுத்தியுள்ளார்.