Home Featured இந்தியா மரணமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் – காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் – மோடி அறிவிப்பு

மரணமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் – காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் – மோடி அறிவிப்பு

934
0
SHARE
Ad

திருவனந்தபுரம் – கேரளாவில் உள்ள கொல்லம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து அங்கு விரைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதற்கு முன்பாக தீவிபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக உடனடியாக வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.

தீவிபத்து நடந்த இடத்திற்கு சென்று சேர்வதற்கு முன்பாக சில முன்னேற்பாடுகளையும் மோடி செய்துள்ளார்.

Modi-tweets-kollam fire-கொல்லம் தீவிபத்து – பிரதமர் வருகை தொடர்பில் மோடியின் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் செய்திகள்….

#TamilSchoolmychoice

முதல் கட்டமாக சம்பவ இடத்திற்கு வரும்போது பிரதமர் என்ற முறையில் அவருக்கு எந்தவித மரியாதைகளும் வழங்கப்பட வேண்டியதில்லை என்றும், தீவிபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு உதவிகள் வழங்குவதும், நிவாரணங்கள் அளிப்பதற்கும்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் கொண்ட ஒரு மருத்துவர் குழுவை தன்னுடன் மோடி கொல்லத்துக்கு அழைத்துச் செல்கின்றார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.