Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான முதல் தேர்தல் பரப்புரை! (படக் காட்சிகள்)

ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான முதல் தேர்தல் பரப்புரை! (படக் காட்சிகள்)

699
0
SHARE
Ad

சென்னை – நேற்று சனிக்கிழமை ஒரு பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தோடு சென்னையில் தனது தேர்தல் பரப்புரையை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடக்கினார்.

அந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.

அந்தப் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice

Jayalaltha-campaign-1st day-selling articles

ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரைக்கு முன்னதாக அவரது புகைப்படங்கள், அவரது படம் பதித்த ஒட்டுத் தாள்கள் (ஸ்டிக்கர்) ஆகியவை விற்பனை செய்யப்பட்டன. அந்த வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும் காட்சி…

Jayalalitha-campaign-crowd

ஜெயலலிதாவின் உரையைக் கேட்க குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள்…அதிலும் அதிகமான பெண்கள்…வெற்றிக்கு அறிகுறியா…அல்லது சேர்க்கப்பட்ட கூட்டமா?

Jayalitha-campaign-crowd-MGR logo

எம்ஜிஆர் மறைந்து ஆண்டுகள் 29 ஆண்டுகள் கடந்து விட்டாலும், இன்றைக்கும் அவர்தான் அதிமுகவின் ஆதர்ச வாக்கு வங்கி நாயகன் – அவரது உருவம் பதித்த சின்னங்களுடன் இரட்டை இலை சின்னத்தைக் குறிக்கும், இரண்டு விரல் காட்டி நிற்கும் பெண்மணிகள்…

Jayalalitha-campaign-1-1st day

தேர்தல் பரப்புரை நிகழ்த்த மேடைக்கு வரும் ஜெயலலிதா – தனது உரை முழுவதையும் நாற்காலியில் அமர்ந்து கொண்டே அவர் நிகழ்த்தினார். இருப்பினும், தகவல் ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்திருந்ததற்கு நேர் மாறாக, தெம்புடன், தெளிவுடன், நல்ல உடல்நலத்துடன் அவர் இருப்பது தெரிந்தது. உரையாற்றும் போது குரலிலும் பிசிறில்லை – தடுமாற்றமில்லை. ஆக்ரோஷத்திற்கும், ஆவேசத்திற்கும் கூட கொஞ்சமும் குறைவில்லை.

Jayalalitha-speech-1st day-campaign

பலதரப்பட்ட அம்சங்களைத் தொட்டு ஜெயலலிதா ஆற்றிய உரை அவர் அறிமுகப்படுத்திய 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாகனங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வாக்காளர்களால் பார்க்கப்பட்டது.

Jayalalitha-campaign-1st day-2

பிரம்மாண்டமான மேடையில் அமர்ந்து உரையாற்றும் ஜெயலலிதா… அவருக்கு முன்னால் அவர் அறிமுகப்படுத்திய வேட்பாளர்கள் அமர்ந்துள்ளனர்.

Jayalalitha-1st day campaign-speech-

ஜெயலலிதாவின் முதல் தேர்தல் பரப்புரை சிறப்பாகவும், தன்னை நோக்கி இதுநாள் வரை எழுப்பப்பட்டு வந்த கேள்விக் கணைகளுக்கு ஓரளவுக்கு பதிலளிக்கும் விதமாகவும் அமைந்திருந்தது எனத் தகவல் ஊடகங்கள் பரவலாகத் தெரிவித்துள்ளன. குறிப்பாக, சென்னை வெள்ளம் குறித்த அவரது விளக்கமும், மதுவிலக்கு கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வைத்து வரும் சில குற்றச்சாட்டுகளின் தாக்கத்தை ஓரளவுக்குத் தணிப்பதாக இருந்தது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 -செல்லியல் தொகுப்பு