சென்னை- திமுக தேர்தலை அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். இதில், விவசாயிகள் மற்றும் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்றும், மது விலக்குக்கு தனி சட்டம் இயற்றப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் கலைக்கப்படும், மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு மருத்துவ உதவி அளிக்கப்படும், டாஸ்மார்க் ஊழியர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தலை அறிக்கை திட்டங்கள் :
● மது விலக்கை அமல்படுத்த தனிச்சட்டம்.
● டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்.
● விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்.
● சிறு, குறு விவசாய கடன் ரத்து.
● நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வகம்.
● ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை.
● ஏழை எளியோருக்கு “அண்ணா உணவகம்”.
● மீனவ சமூகம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும்.
● காஞ்சிபுரம் நெசவு பூங்கா.
● கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.
● நீர் பாசனத்திற்கு தனி அமைச்சகம்.
● தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம்.
● மாணவர்களின் கல்வி கடன் ரத்து.
● அனைத்து மாணவர்களுக்கு 3ஜி/4ஜி இணைய வசதி.
● மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக்கப்படும்.
● ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
● மீண்டும் வரும் முன் காப்போம் திட்டம் கொண்டுவரப்படும்.
● பத்திரிகையாளர் மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.
● பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்.
● வசதியற்றவர்களுக்கு கைபேசி இலவசமாக வழங்கப்படும்.
● எம்ஜிஆர் திரைப்பட நகரம் புனரமைக்கப்படும்.
● தொழில்முனைவோருக்கு 100 நாளில் அனுமதி.
● முதியோருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சலுகை.
● ஆவின் பால் லிட்டருக்கு ரூ 7 குறைக்கப்படும்.
● கிருஷ்ணகிரியில் தோட்டப் பல்கலை., கட்டப்படும்.
● நூறு நாள் வேலை திட்டத்தில் 50 நாட்களாக உயர்த்தப்பட்டு 50 நாளை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
● மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தும்முறை.
● கலப்பு திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.60000/ – பணம்; 4கிராம் தங்கம் வழங்கப்படும்.
● மீண்டும் சட்டப்பேரவையில் மேலவை அமைக்கப்படும்.