சென்னை – விஜய்யின் 60-ஆவது படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு முன்னதாகவே இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. சென்னை அருகில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் இன்று இப்படத்தின் பூஜை நடந்தது. இதில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பூஜையில் நடிகர் விஜய் வேட்டி, சட்டையுடன் கலந்துகொண்டார். கீர்த்தி சுரேஷ் பட்டுப் புடவையுடன் கலந்துகொண்டார். இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
#TamilSchoolmychoice
இப்படத்தில் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.