Home Featured தமிழ் நாடு திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகளா?

திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகளா?

520
0
SHARE
Ad

mdmdkசென்னை – மக்கள் தேமுதிக அமைப்பினர்கள் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசிய நிலையில், திமுக கூட்டணியில் அந்த அமைப்புக்கு 3 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சந்திரகுமார் தலைமையிலான தே.மு.தி.க. அதிருப்தி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், சென்னை தியாகராயநகரில் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்ட முடிவில் ‘மக்கள் தே.மு.தி.க.’ எனும் புதிய இயக்கம் தொடங்கப்படுவதாக சந்திரகுமார் அறிவித்தார்.

”அதிமுக. அரசை அகற்ற வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். எனவே தேமுதிக-திமுக. கூட்டணி உருவாக ஆசைப்பட்டோம். மக்கள் தேமுதி. இயக்கத்தில் நாங்கள் 10 பேருமே பொறுப்பாளர்கள்தான்.

#TamilSchoolmychoice

அதிமுக அரசை அகற்ற திமுக சார்பில் அழைப்பு வந்தால்,  நிச்சயம் அக்கட்சி தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசுவோம். வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவோம்” என்று கூறியிருந்தனர்.

mdmdk-leadersmetkalaignar--2இந்நிலையில், சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை  சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தங்களது மக்கள் தேமுதிக ஆதரவளிப்பதாகவும், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

திமுக கூட்டணியில் உங்களுக்கு ‘சீட்’ ஒதுக்கப்படுமா என்ற கேள்விக்கு, எவ்வித நிபந்தனையையும் விதித்து திமுகவுக்கு தாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறினார். மேலும், ”  உங்களை நம்பி வந்துள்ளோம் என்று கருணாநிதியிடம் கூறினோம். அதற்கு கடைசி நேரத்தில் வந்துள்ளீர்களே என அவர் கூறினார்”.

“நாங்கள் சில தொகுதிகளை கேட்டுள்ளோம். அவர்கள் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம்” என சந்திரகுமார் தெரிவித்தார். அவர் இவ்வாறு கூறினாலும், திமுக கூட்டணியில் மக்கள் தே.மு.தி.கவுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.