Home Featured நாடு கிளந்தான் பள்ளியில் தீய சக்தியா? 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!

கிளந்தான் பள்ளியில் தீய சக்தியா? 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!

904
0
SHARE
Ad

hysteria 130416கோத்தா பாரு – கிளந்தானில் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளி ஒன்றில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் ஹிஸ்திரியாவால் (hysteria) பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரச்சனையை சரி செய்ய அப்பள்ளியின் முதல்வர் போமோக்களின் உதவியை நாடியுள்ளார்.

இது குறித்து அப்பள்ளியின் முதல்வர் சித்தி ஹாவா மட் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் வெளியிட்டுள்ள தகவலில், எஸ்எம்கே பெங்காலான் செப்பா 2 பள்ளியும், அதன் நிர்வாகமும் “தீய சக்திகளால்’ பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை விரட்டுவதற்கான வழிகளை தற்போது கண்டறிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றுவரை, 8-க்கும் மேற்பட்ட உஸ்தாஜ், போமோ மற்றும் இஸ்லாமிய பாரம்பரிய நிபுணர்களின் உதவியுடன், பள்ளி வளாகத்திலுள்ள தீய சக்திகளை விரட்ட முயற்சி செய்து வருகின்றோம்” என்று சித்தி ஹாவா மட் தெரிவித்துள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை தான் அப்பள்ளி மீண்டும் திறக்கப்படவுள்ளதாகவும் அதுவரை போமோக்களும், உஸ்தாஜ்களும் தீயசக்திகளை விரட்டுவதற்கான சடங்குகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்பள்ளியில் கடந்த திங்கட்கிழமை முதல் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்டதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் கூறுகின்றது.

தீய சக்திகளை விரட்டி நல்லது செய்ய நினைக்கும் யாரையும் தாங்கள் வரவேற்பதாக சித்தி ஹாவா மட் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியை நோர்லீலாவத்தி ரம்லி (வயது 32) தன்னே ஏதோ கீழே தள்ளுவதாகவும், பாதிக்கப்பட்ட ஒரு மாணவிக்கு அருகில் சென்ற போது கருப்பு உருவம் ஒன்று கடந்து சென்றதாகவும் கூறியுள்ளார்.