Home Featured உலகம் ஜப்பானில் அதிர்ச்சி: கார்ட்டூன் படத்தை பார்த்து 43-ஆவது மாடியிலிருந்து குதித்த சிறுமி பலி!

ஜப்பானில் அதிர்ச்சி: கார்ட்டூன் படத்தை பார்த்து 43-ஆவது மாடியிலிருந்து குதித்த சிறுமி பலி!

581
0
SHARE
Ad

japanhouselongடோக்கியோ – கார்ட்டூன் படத்தை பார்த்து 43-ஆவது மாடியில் இருந்து குதித்து 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளளார். இந்த சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது. ஜப்பானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒசாகா நகரில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 43-ஆவது மாடியில் குடும்பத்துடன் அந்த சிறுமி வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று அந்த சிறுமி குழந்தைகளுக்கான கார்ட்டூன் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ‘பறக்கும் குடும்பத்தினர்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கார்ட்டூன் படம், ஜப்பானில் பிரபலம்.

இந்நிலையில், அச்சிறுமி தங்களது வீட்டின் பால்கனியின் விளிம்பில் ஏறி நின்று கொண்டு, பின்னர் கீழே குதித்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுமி பால்கனியின் மீது ஏறி நின்று விளிம்பு பகுதிக்கு செல்வதை குடும்பத்தினர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் விரைந்து வந்து சிறுமியை காப்பாற்றும் முன்னர், கால் தவறி சிறுமி கீழே விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் குடும்பத்தினரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சிறுமி குதித்து உயிரிழந்துள்ள சம்பவத்தில் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய அந்த கார்ட்டூன் படத்தின் பெயரை வெளியிட மறுத்துள்ள காவல்துறையினர், அது மேலும் பல சிக்கலை உருவாக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணம் அந்த குடும்பத்தினரை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.