Home Featured நாடு திரெங்கானுவில் ஜாகிர் நாயக் சொற்பொழிவு – சுமார் 40,000 பேர் திரண்டனர்!

திரெங்கானுவில் ஜாகிர் நாயக் சொற்பொழிவு – சுமார் 40,000 பேர் திரண்டனர்!

816
0
SHARE
Ad

Zakir Naikகோலாலம்பூர் – திரெங்கானுவில் நேற்று இரவு பாடாங் அஸ்டாகா என்ற இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாம் மத போதகர் ஜாகிர் நாயக் ஆற்றிய உரையைக் கேட்க சுமார் 40,000 பேர் திரண்டிருந்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி, அவர் மலேசியாவிற்கு வருகை தந்தது முதல், திரெங்கானு மாநிலத்தில் மட்டும் நேற்றோடு நான்கு முறை உரையாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

திரெங்கானு மந்திரிபெசார் அகமட் ரசிப் அப்துல் ரஹ்மான் உட்பட, ஏராளமான பொதுமக்கள், மழையையும் பொருட்படுத்தாமல் அங்கு கூடி, குரானில் சொல்லப்பட்டிருக்கும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை பற்றிய ஜாகிரின் உரையைக் கேட்டு ரசித்தனர் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice