Home Featured தமிழ் நாடு நான் ஆட்சிக்கு வருவேனா என்பது எனக்கு தெரியாது – விஜயகாந்த் பரபரப்பு!

நான் ஆட்சிக்கு வருவேனா என்பது எனக்கு தெரியாது – விஜயகாந்த் பரபரப்பு!

574
0
SHARE
Ad

vijayakanth1_2769476fசென்னை – செய்யூர் சட்டமன்ற தொகுதியில் நடந்த தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ‘நான் ஆட்சிக்கு வருவேனா என்பது தெரியாது’ என விஜயகாந்த் பேசியதால் கூட்டணியில் பெரும் சலசலப்பு எழுந்துள்ளது.

மதுராந்தகம் அடுத்துள்ள செய்யூர் சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று நடந்தது. இதில் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் கலந்து கொண்டு மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘எனக்கு முன் பேசியவர்கள் நான் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் பொருட்கள் வீடுதேடி வரும் என்றனர். நான் ஆட்சிக்கு வருவேனா, வரமாட்டேனா என்பது எனக்கு தெரியாது.

#TamilSchoolmychoice

ஒருவேளை வந்தால், ரேஷன் பொருட்கள் அத்தனையும் வீடுதேடி வரும். ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் குட்டிக்கதைகள் சொல்ல தெரியுமா, எனக்கும் தெரியும்’’ என விஜயகாந்த் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.