Home Featured தமிழ் நாடு கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி!

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி!

521
0
SHARE
Ad

m.k.stalinசென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை  வெளியிட்டுள்ளது. கொளத்தூரில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மக்கள் தே.மு.தி.க., பெருந் தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவபடை, தமிழ் நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் தரப்பட்டுள்ளது. கட்சி தலைவர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.